நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காவல்துறைக்கு முக்கிய உத்தரவு போட்ட முதலமைச்சர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சாதி மதம் சார்ந்த அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணித்து களையெடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவதூறு கருத்துகள் மற்றும் சாதி மத மோதல்களை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கணகாணித்து முளையிலேயே கிள்ளியெறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மக்களிடையே பதட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் இதுபோன்ற வன்மங்கள் பரப்பப்படுவதை சட்டப்படி தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, " தமிழ்நாடு காவல்துறை குற்றங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் துறையாக மட்டுமல்லாமல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் செயல்படும் துறையாக இருக்க வேண்டும். குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் குறைந்துள்ளது என்ற அறிக்கைகள் வேண்டாம். குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காதவண்ணம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மீதான புகார்களில் நடுநிலையாக செயல்படவேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய விஷயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் - அதிருப்திக்கு என்ன காரணம்?
சமூகத்தில் சாதி மத மோதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அதேசமயத்தில் சமூகவலைதளங்களில் இதுபோன்ற நச்சுக்கருத்துகள் விதைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். அங்கு தான் சாதி மதம் தொடர்பான கருத்துகள் பதிவிட்டு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் சொகுசாக வீட்டில் இருக்கின்றனர். இதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். காவல் துறைக்கு புகார் அளிக்க மக்கள் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது எனவும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பெரிய நிகழ்வாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். குற்றம் செய்ததற்கான ஆதரங்கள் இருந்தால் மட்டும்தான் கைது செய்யும் அதிகாரம் உள்ளது. மாதம்தோறும் உள்துறை செயலாளர் காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணையவழியாக ஆலோனை நடத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதம் மற்றும் சாதி சார்ந்த கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் நடைபெறும் இந்த விஷம பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கில் முதலமைச்சர் காவல்துறைக்கு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இனி காவல்துறையினரின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ