திடீரென வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு... உயிர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூரில் பரபரப்பு!

Cuddalore DMK MLA: கடலூரில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்வில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Jul 10, 2023, 01:50 PM IST
  • அங்கு யாருக்கும் நல்வாய்ப்பாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
  • வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • திமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி எம்எல்ஏ பங்கேற்றுள்ளார்.
திடீரென வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு... உயிர் தப்பிய திமுக எம்எல்ஏ - கடலூரில் பரபரப்பு! title=

Cuddalore DMK MLA: கடலூர் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியில் திமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்க வந்து, காரை நிறுத்திவிட்டு சென்ற சில நிமிடங்களில் மர்ம நபர் மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண மண்டபத்தில் இருந்த மக்கள் பதறி ஓடிய நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படும் நிலையில் எதற்காக என்ன காரணம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவம் இரவு 8 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி எறிந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு விசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக சட்டமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார். நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் எவ்வித காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் எம்எல்ஏ-வை நோக்கி நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், போலீசாரின் விசாரணையில் தான் இதுகுறித்த தகவல்கள் உறுதியாகும். 

கடலூர் சம்பவம் ஒருபுறம் இருக்க ஜோலார்பேட்டை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்ட நிகழ்விலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் திமுக பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆளுநர் குறித்து 15 பக்கத்திற்கு புகார்... ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!

சென்னை சென்ட்ரல் இருந்து பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அதற்கு விழா நடத்தப்பட்டது. அதில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கலந்து கொள்ள இருந்தனர். பின்னர், இந்நிகழ்வில் அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  மேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது, அங்கு திடீரென கொடியுடன் வந்த பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மேடையில் ஏற முற்பட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மேடையில் அமர்வதற்கு ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தள்ளுமுள்ளு வரை சென்றது. 

மேலும் பாஜகவை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன்  மேடையில்  பேசுவதற்கு முன்பாக 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்டதால் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேடையில் இருந்தவர்கள் அவரை பேச விடாமல் தடுத்தனர்.

இதனால் அங்கிருந்த திமுகவினர் மற்றும் பாஜகவினர் மாறி மாறி கோஷமிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்  இதை தொடர்ந்து அங்கிருந்து ரயில்வே காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி மோதல் ஏற்படாமல் தடுத்தனர். மேலும் அங்கு வந்த சதாப்தி ரயில் புறப்படும் முன்பாக கொடி அசைக்கும் போது இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

மேலும் படிக்க | திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மிளவும் கவலையில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News