சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு திட்ட பணிகளுக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக மற்றும் திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். முதலில் அரங்கத்திற்குள் கட்சியின் தலைவர்கள் வரும்போது ஆரவார சத்தத்தோடு வாழ்த்து கோஷம் எழுந்தது. அப்போது திமுக - பாஜக தொண்டர்களுக்கு இடையே கோஷங்கள் எழுப்புவதில் மோதல் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனையடுத்து அவர்கள் மாறி மாறி ஒரே நேரத்தில் கோஷமிட்டுக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முதலில் வரவேற்புரையாற்றினார், அப்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்று வரவேற்றபோது, அரங்கமே திமுக தொண்டர்களின் கோஷத்தால் அதிர்ந்தது. சுமார் 1 நிமிடத்திற்கு பிறகு தான் மீண்டும் எல்.முருகன் மீண்டும் பேச்சை தொடங்கினார்.



பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக நலன் சார்ந்து 5 கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினார்.அப்போது ஒன்றிய அரசு என்று 12 இடங்களில் குறிப்பிட்டு அவரின் உரை அடங்கியிருந்தது, முதல்முறை ஒன்றிய அரசு என்று ஸ்டாலின் கூறிய உடனே பாஜக தொண்டர்கள், ஒன்றிய அரசு இல்லை மத்திய அரசு என்று குறிப்பிடக் கூறி கோஷமிட்டனர்.



இருந்தாலும் முதலமைச்சர் அதை பெரியதாய் கவனிக்காதவாறு உரையை தொடர்ந்து மீண்டும் அழுத்தமாக ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என 12 இடத்தில் குறிப்பிட்டு பேசினார்.  இதன் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜனவரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டதற்கு முழுமையாக ஒன்றிய அரசே பணம் கொடுத்து வருகிறது என்று ஆங்கிலத்தில் யூனியன் கவர்னமெண்ட் என்று குறிப்பிட்டு கூறினார்.



மேலும் படிக்க | ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் சிறந்தவராக இருக்கிறார் - பிரதமர் மோடி பேச்சு


அதாவது மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று சொன்னதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு யூனியன் கவர்மெண்ட் பணம் கொடுப்பதாக பதிலடி கொடுத்தார். இதனையடுத்து பாஜக தொண்டர்கள் இதற்கு ஆரவாரமாகக் கரகோஷம் எழுப்பினர். அதே நேரம் மு.க.ஸ்டாலின் பேசும் போது திமுக தொண்டர்கள் உற்சாகமாக கோஷமெழுப்பினர். இப்படியாக நேற்றைய நிகழ்ச்சியில் சில சுவாரஸ்யங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.


மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த ‘செக்’.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR