சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் என்ஜினீயர் பெண் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் படுகொலை செய்தார். படுகொலை செய்யப்பட்ட சுவாதி குடும்பத்தாருக்கு எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:- தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என சட்டசபையில் முதல் அமைச்சர் கூறியது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சென்னை கொலை நகராக மாறியுள்ளது. சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாதியின் கொலை தமிழக போலீசுக்கு விடுக்கப்பட்ட சவால். அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை பட்டியலிட்ட ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பு குறித்த 13 அம்ச திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். வீதியிலே செல்லும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.