சென்னை: 2019 மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மே 2 ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 


இந்த நான்கு தொகுதிக்கும் அனைத்து கட்சிகளும்  வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தநிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, "பாசிச சக்திகளையும் - அடிமைக் கூட்டத்தையும் அறவே அகற்றிட ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே 19ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் என் மனமார்ந்த நன்றி!


உங்கள் உழைப்பின் வியர்வையில் உறுதியாகட்டும் வெற்றி!


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.