மதிமுக போட்டியிடும் தொகுதிகளை உரிய நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார் என வைகோ தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் மதிமுக எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகிவிட்டது என்றும் இதுகுறித்து ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு எந்த தொகுதி வழங்க வேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. 


இந்த பேச்சுவார்ததையில் திமுக தொகுதி பங்கீடு குழுவுடம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "மதிமுக எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தகுந்த நேரத்தில் அறிவிப்பார். எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகிவிட்டது" என்றார். 


நேற்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரியும் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார். அவரும் ஸ்டாலின் இதுகுறித்து அறிவிப்பார் என தெரிவித்திருந்தார்.