சட்டப்பேரவையில் இலங்கையின் பொருளாதார நெறுக்கடி நிலை குறித்து இன்று வாதிடப்பட்டது. அப்போது இலங்கைக்கு உதவ வேண்டும் என்ற தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிரைவேற்றப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்


"இலங்கை தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் எடுக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. 


இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.


இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.



பின்னர் தொடர்ந்து பேசிய முதல்வர் "வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் இலங்கையின் மீதான தனி தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" 


"எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பி.எஸ் தன் குடும்பத்தின் சார்பாக 50 லட்சம் அறிவித்துள்ளது மற்றவர்களும் இதே போல் முன் வரவேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன்" என்று பாராட்டி பேசினார்.



இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக வழங்கப்படும் என நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் அறிவித்தார்.


பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், "2009இல் ஈழமக்கள் அழித்தொழிக்கப்பட்ட போது உலகமே அதை வேடிக்கை பார்த்த சூழலில் அங்கே உள்ள மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை உலகத்தின் பார்வைக்கு யாராலும் எடுத்துச் செல்ல முடியவில்லை, ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. 


மேலும் படிக்க | நம்பி வந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சை அருகே கொடூரம்


அப்படியான சூழலில் கலைஞர் அவர்கள் தமிழகத்திலிருந்து நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்கு இருக்கும் சூழலை அறிந்து வெளியுலகத்தில் சொல்லுங்கள் என அனுப்பி வைத்தார்.


அந்த வழித்தடத்தில் பயணிக்கும் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்மக்கள் மட்டுமில்லை, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உதவுவோம் என இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவதாக அறிவித்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார வரவேற்கிறது.


அங்கே அனுப்புவது அரிசி மருந்து மட்டுமில்லை,  மனித நேயத்தையும் பன்முகத்தன்மையையும் என்பதை இந்த திராவிட மாடல் ஆட்சி உணர்த்துகிறது. தமிழக அரசு இந்தியாவிற்கு ரோல்மாடல் அரசாக  திகழ்ந்து வருகிறது.



விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முன் வருகிறோம். இதையே அரசின் அறிவிப்பாகவும் வெளியிட வேண்டுகிறோம்." என்றார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்ததை மேற்கோள் காட்டி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்குவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.



மேலும் படிக்க | கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறும் ஐஐடி மெட்ராஸ்; மேலும் 26 பேருக்கு தொற்று


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR