மம்தாவின் அழைப்பு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் விவாதித்துவிட்டு தேர்தல் நேரத்தில், முடிவு சொல்வதாக ஸ்டாலின் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 3-ல் வெளியான இம்மாநில தேர்தல் முடிவுகளில், திரிபுராவில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி உறுதியானது. 


நாகாலந்த் மற்றும் மேகாலயாவில் யார் ஆட்சியை பிடிப்பார் என குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் பாஜக கூட்டனியால் ஆன ஆட்சியே நடக்கவுள்ளது என்பதும் உறுதியானது. இதனால் 3 மாநிலங்களிலும் பாஜக கட்டுப்பாட்டில் வந்துள்ளது


இதையடுத்து, இன்று பாஜக ஆதரவுடன் மேகாலாயா மாநில முதல் மந்திரியாக தேசிய மக்கள் கட்சித்தலைவர் கன்ராட் சங்மா பதவியேற்றுக்கொண்டார். ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


இந்த சூழலில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் பெரிதும் நம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.


ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாவது அணி முன்னெடுப்பு பணி தொடங்கியுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்னெடுப்பிற்கு மம்தா, ஓவைசி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



இதற்கிடையே  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கு மம்தா அழைப்பு விடுத்திருந்தார். மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மம்தா ஆதரவு கோரினார்.


மம்தாவின் அழைப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்:- மூன்றாவது அணியில் இணைய திமுகவிற்கு மம்தா அழைப்பு விடுத்தார். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் விவாதித்துவிட்டு தேர்தல் நேரத்தில் சொல்வதாக மம்தாவிடம் தெரிவித்தேன் என ஸ்டாலின் கூறினார்.