மதுரை: 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதை பார்வையிட சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்றார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாக புகழ்ந்தார். அதேவேலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் தான் தமிழகத்தில் முன்னேறி வருகிறது என்றும், ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வரவே முடியாது என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது, தமிழகத்தின் முதலமைச்சர் மிகவும் ராசியானவர். அதனால் தான் நீரிநிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அதிமுக அரசு ஜெட் வேகத்தில் அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. அதனால் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை அரசின் தலையீடு இருக்காது. அதை முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் தான் மட்டுமே நடத்தும். 


ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வெங்காயத்தை குறித்து கிண்டல் செய்துள்ளார். ஆனால் அந்த வெங்காயம் நல்ல காரத்தன்மையாக இருந்தது. எப்படி சொல்கிறேன் என்றால், அதை நானும், முதல்வரும் சாப்பிட்டு பார்த்தேன்.


தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி தான் அடையும். அவர்கள் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறார்கள். அது நடக்காது. எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை நோக்கி தான் செல்கிறார்கள். அவர்கள் காமெடி அரசியல் செய்து வருகிறார்கள். காமெடி அரசியல் செய்யும் ஸ்டாலின் ஒருபோது முதலமைச்சர் பதவிக்கு வர முடியாது எனக் கூறினார்.