போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க மூன்று மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கபட்டுள்ளதாக தமிழக உள்துறை அறிவித்துள்ளது. 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு ஆகிய காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் உடனடியாக பரவி வருகின்றன.  




இதனால் போராட்டம் தொடர்பாக தவறான வதந்திகள் இணையத்தில் பரவி வன்முறை வெடிக்கும் என கருதி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவையை சுமார் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளது. மொபைல் போன்களிலும் இணைய சேவையை முடக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொபைல், தொலைப்பேசிகளில் குரல் சேவை மட்டும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து, தற்போது இன்று காலை 5.15 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!.