கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் வலிநிவாரணி ஊசிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் கோவை மண்டலத்தில் முக்கிய விளையாட்டு அரங்காகும். அதிகம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதியுடன், மேம்படுத்த ஓடுதளம் போன்ற சிறப்பு அம்சங்களுடன் கூடிய நேரு உள்விளையாட்டு அரங்கில்,சென்னைக்கு அடுத்தபடியாக மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள ஆண்கள் கழிவறையில் பயன்படுத்தபட்ட வலி நிவாரண மருந்தின் குப்பிகள் மற்றும் ஊசிகள் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ‘பழிக்கு பழி;’: நாய்கள் மீது போர் தொடுத்துள்ள குரங்குகள்; சுமார் 250 நாய்கள் பலி


.முக்கிய விளையாட்டு போட்டிகள் மட்டுமே நடத்தப்படும் இந்த அரங்கில் எப்படி இந்த  ஊசிகள் வந்தது என அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.  இந்த வலி நிவாரண ஊசிகளை ஊக்கமருந்தாக பயன்படுத்தலாம் என்பதோடு, விளையாட்டு போட்டிகளின் போது மருத்துவ வசதிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தபட்டு வரும் நிலையில் கழிப்பறையில் பயன்படுத்தபட்ட ஊசிகள் கிடப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..  கொரோனோ பரவல் காரணமாக மூடப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கம் தளர்வுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு் தடகள மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு வருகிறது.



இந்நிலையில் தமிழக காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான 61 வது விளையாட்டு போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் விளையாட்டு போட்டி நடந்த நேரு விளையாட்டு அரங்கின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்து செலுத்தியதற்கான சிரிஞ்சு மற்றும் காலி மருந்து புட்டிகள் ஆங்காங்கே கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கான நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற காவலர்கள் இதனை பயன்படுத்தி விட்டு வீசி சென்றனரா? அல்லது வேறு விளையாட்டு வீரர்கள் யாராவது இந்த ஊக்கமருந்து மற்றும் சிரிஞ்சுகளை இங்கு வீசிச்சென்றனரா? என்பது தெரியவில்லை என்று விளையாட்டு அரங்கம் நிர்வாகத்தினர் சார்பில் தெரிக்கப்பட்டது.



இந்நிலையில் ஊசிகளில் தேங்கிய இரத்தம் கூட உறையாமல் இருப்பதால் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்  ஊக்கமருந்தாக இதை பயன்படுத்தியுள்ளனரா? அல்லது வெளிநபர்கள் ஊடுருவி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாநகரில் கொரோனோவிற்கு பிறகு வலி நிவாரண மருந்துகளை போதை  வஸ்துகளாக பயன்படுத்தி வரும் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் விளையாட்டு அரங்கில் வலிநிவாரண ஊசிகள் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | பொள்ளாச்சி அருகே 1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; மூவர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR