கோவை: தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்துதல், தூக்கு மாட்டி கொள்ளுதல், கையை கிழித்து கொள்ளுதல் போன்றவற்றை செய்து தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் வித்தியாசமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கோவையில் தியாகராய நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.  இவர் கடந்த 2-ம் தேதியன்று தனது கழுத்தை அறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு உடனாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக வேட்பாளரான கல்லூரி தாளாளர்


அங்கு அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆழமான காயம் இல்லாததால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் அந்த இளம்பெண் பிழைத்து கொண்டார்.  கழுத்தில் ஏற்பட்ட காயம் படிப்படியாக குணமடைய தொடங்கியதும் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.  இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அவருக்கு, காயம் சரியான போதிலும் கழுத்தில் அதிகமாக வலி ஏற்பட தொடங்கி இருக்கிறது.  இதனை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு அப்பெண்ணை கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணிற்கு சிடி ஸ்கேன் எடுத்தனர். 



அந்த பரிசோதனையில் அப்பெண்ணின் கழுத்து தண்டுவடத்திற்கு அருகே, தையல் ஊசி ஒன்று குத்தி இருப்பது தெரியவந்தது.  இதனை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள், இதுகுறித்து அப்பெண்ணிடம் கேட்டனர்.  அதற்கு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவே தான் இவ்வாறு ஊசியை எடுத்து கழுத்தில் குத்தி கொண்டதாக கூறினார்.  அதனை தொடர்ந்து அந்த ஊசியை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.  ஆனால் இந்த சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரியதொரு சவாலாக அமைந்தது.  அதாவது அந்த ஊசி மூச்சு குழாயில் இருந்து கழுத்து தண்டுவடத்திற்கும், மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கும் அருகே இருந்தது.  இதனை அகற்றுவது கடினமான ஒன்று, சிறிது பிழை நிகழ்ந்தாலும் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். 


பின்னர், தண்டுவட மருத்துவர்கள், ரத்த நாள மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மற்றும்  மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து அப்பெண்ணிற்கு கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து ஒருவழியாக அந்த 7.5 செ.மீ நீளமுள்ள ஊசியை அகற்றினர்.  இது மிகப்பெரிய சவாலாக அமைந்ததாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ALSO READ கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துச் சென்ற 15 வயது சிறுவன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR