எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய துவங்கியது. அதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கன மழை கொட்டி வருகிறது.
மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்
இந்த சூழலில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 3,ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மிக்ஜாம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் அது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 4,ம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்குஆந்திரா கடலோரப் பகுதிகளான சென்னைக்கும், மச்சிலிபட்டினத்திற்கும் இடையே மிக்ஜாம் புயலாக கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, நாகை,காரைக்கால், கடலூர் சென்னை, எண்ணூர் உள்ளிட்ட 9,துறைமுகங்களில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து கடலுக்கு ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என வாக்கி டாக்கி மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை குடும்பத்தினரும், அரசும் எதிர்நோக்கியுள்ளது.
மேலும் படிக்க | சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ