ஆற்றில் மீன் பிடிப்பதெல்லாம் பழசு... நாங்க ரோட்டுலயே மீன் பிடிப்போம்!!
தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், மக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், சிலர் இந்த சூழ்நிலையிலும் தேவையற்ற பல வீரதீர சாகசங்களை செய்துகொண்டு ஆபத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில், நீரில் அடித்து வரப்பட்ட மீன்களைப் பிடிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி, ஆபத்தை உணராமல் நடுரோட்டில் மீன் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் நிரம்பி வழியும் நிலையில் செஞ்சி பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக செஞ்சி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் நீரால் சூழப்பட்ட இருந்த நிலையில் திருவண்ணாமலை (Tiruvannamalai) சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி இந்தியன் வங்கியில் இருந்து திண்டிவனம் சாலை பயணியர் மாளிகை வரை 2 கிலோமீட்டர் நீரோடையாக மாறியது.
இதன் காரணமாக பல்வேறு ஏரியில் இருந்து அடித்து வரப்பட்ட மீன்கள் (Fish) சாலைகளில் செல்லவே இளைஞர்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
ALSO READ:கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை - தமிழக அரசு அதிரடி
தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். மேலும் மின்மாற்றி அருகேயும் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் தொடர்ந்து மீனைப் பிடித்து வந்தனர்.
ஏரிகளில் இருந்து வெளியேறும் நீரில் அடித்து வரப்படும் மீன்கள் 4 கிலோ முதல் 15 கிலோ வரை உள்ளன. அதிக எடை கொண்ட மீன்கள் இந்த வெள்ளத்தில் (Flood) அடித்து வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மீன்களை பிடிக்க அதிகளவில் அப்பகுதியில் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு உள்ள ஆபத்தை உணராமல் மக்கள் அங்கு கூடி வருகின்றனர்.
அப்பகுதியில் மீன் பிடித்தவர்கள் கூறுகையில், நீரில் அடித்துக்கொண்டு வரும் மீன்கள் அதிக எடை கொண்டவையாக இருப்பதாகவும், அவற்றை தங்களது வீடுகளுக்கு சமைக்க எடுத்துச் செல்வதாகவும் மேலும் இதுபோன்று சாலையில் மீன் கிடைப்பதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ALSO READ:பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR