செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழகத்தில் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் கருத்தரிப்பு மையங்கள் அரசு சார்பாக துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதை பற்றி தெரிவித்தார். சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கோர்பி வேக்ஸ் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘இந்தியா முழுவதும் கோர்பி வேக்ஸ் தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக்கொள்ள தகுதியுள்ள தடுப்பூசியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர். தற்போது தமிழகத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.


இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசியாக இதை போட்டு கொள்ளலாம்.  இரண்டு தவணை கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுகொண்ட நபர்களும் கோர்பி வேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்’ என தெரிவித்தார்.


மேலும் படிக்க | பல்லாயிரம் கோடியை ஏப்பம் விட்ட நிறுவனங்கள் - போலீஸுக்கு தெரியாமல் மோசடியா?... ராமதாஸ் கேள்வி


மத்திய அரசு தடுப்பூசி குறித்து எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் அதனை உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் செலுத்திகொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் கூறினார். 


மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒரு இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தான் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95.9% ஆகவும், இரண்டாம் தவணை தடுப்பூசி 89.41% ஆகவும் உள்ளது என்று தெரிவித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்.


செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்த மையங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழகத்தில் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் கருத்தரிப்பு மையங்கள் அரசு சார்பாக துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் 709 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் முதலமைச்சர் இதனை தொடங்கி வைப்பார் என்ற விவரத்தையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்தார்.


மேலும் படிக்க | துறைமுக நுழைவாயிலை சரிசெய்து மீனவர்கள் இறப்புகளை தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ