விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை

Minister Ma. Subramanian on Booster Dose: தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 மையங்களில் நடைபெறும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2022, 03:30 PM IST
  • தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 மையங்களில் நடைபெறும்.
  • அதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்.
  • செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை title=

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 மையங்களில் நடைபெறும். அதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு  மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர். 

மேலும் படிக்க | சேலத்தில் பெய்த கனமழை; 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 27.7 2020 அன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் கருத்தடை வலையம் தமிழகத்தில் மிக சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளதற்காக தேசிய அளவில் முதல் இடம் பிடித்து விருது பெறப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விவகாரம் தொடர்பாக அந்த வழக்கில் சுகாதாரத்துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். இவற்றுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் அமைச்சர்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேர் இன்னும் போட வேண்டியது இருக்கிறது. வரும் 7 ஆம் தேதி 50ஆயிரம் இடங்களில் 34 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும். 

மேலும், இதுவரையும் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவுகளை வழங்கப்படும் என கூறினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையால்கிறார்களா என்று ஆய்வு செய்ய முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி புரிந்தால் அது வருந்தத்திற்கு உறியது. மருத்துவர்கள் மன உளைச்சலில் ஈடுபட்ட கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க | தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News