பிறந்தநாளுக்கு அண்ணன் வராததால் மாணவி தற்கொலை!
அண்ணன் தனது பிறந்தநாளுக்கு வராததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பள்ளி மாணவி உதயகுமாரி, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உதயகுமாரி அருகில் உள்ள சித்தலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிறந்தநாள் என்பதால் புத்தாடை அணிந்து வீட்டில் எளிமையாக கொண்டாட உள்ள நிலையில் தாய், தந்தை இருவரும் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டனர்.
மேலும் படிக்க | காதல் கணவனால் கொலை செய்து குளத்தில் புதைக்கப்பட்ட மனைவி
நேற்று பிறந்தநாள் என்பதால் உதயகுமாரி பள்ளிக்கு செல்லமால் இரு தம்பிகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். தன்னுடைய பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணன் சந்திரன் வருவர் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அண்ணன் வராத விரக்தியில் உதயகுமாரி வீட்டின் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உதயகுமாரி தூக்கில் தொங்கியதை பார்த்த வீட்டிலிருந்த சிறுவர்கள் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!
பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்த உதயகுமாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் இருந்த செவிலியர் உதயகுமாரியை பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறினர். பின்னர் இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் போலீசார் உதயகுமாரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அண்ணன் சந்திரன் உதயகுமாரியின் பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையிலிருந்து பெரும்பாக்கம் வீட்டிற்கு வராததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | பள்ளி மாணவரோடு ஓடிய ஆசிரியை? போலீஸ் வலைவீச்சு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR