Public Exams Parent Students Guide In Tamil: தேர்வு காலத்தில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலனுக்காக செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளியின் SEN & கவுன்சிலிங் துறைத் தலைவரான, அர்ச்சனா பாத்யே பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு காணலாம். பெற்றோர்கள் தங்களது குழந்தையைப் புரிந்து கொள்ள உதவும் சில எளிய வழிகளை இதில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்விக்கு தயார் செய்தல்


பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி ஏற்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்பது மிகவும் முக்கியமானது. இதில் பிள்ளைகளிடம் கல்விக்குத் தேவையான விஷயங்கள் மற்றும் பயில்வதற்கான ஆய்வுப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்வது மட்டும் இல்லாமல், அவர்களுடன் பாடங்களைக் குறித்த விவாதங்களில் ஈடுபடுவது, சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவது மற்றும் தேவைப்படும் பொழுது உதவி வழங்குவது போன்றவையும் அடங்கும்.


ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை நிறுவுதல்


நன்கு கட்டமைக்கப்பட்ட பழக்க வழக்கமானது, தேர்வுத் தயாரிப்பின் பொழுது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்குகிறது. சரியான உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வழக்கமான மற்றும் போதுமான தூக்கத்தை உறுதி செய்வதன் மூலமும், படிக்கும் நேரங்களுக்கு இடையே சிறிய ஓய்வு இடைவெளிகளை எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவலாம். இந்த நடைமுறை குழந்தைகளின் உடல் நலனை ஆதரிப்பது மட்டும் இல்லாமல், அவர்தம் மன கவனத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கிறது. 



மேலும் படிக்க | சிவராத்திரி, சுப முகூர்த்தம்... அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் - சிறப்பு பஸ்களின் விவரம் இதோ!


அழுத்தமான தருணங்களில் அனுதாபத்தை வழங்குதல்


தேர்வுப் பருவம் என்பது பெரும்பாலும் அழுத்தமான தருணங்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக சவாலான பாட பகுதிகள் அல்லது கடைசி - நிமிட படித்தல்களைக் கையாளும் பொழுது, இது மிகவும் அழுத்தம் உண்டாக்கக்கூடியதாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தேர்வுப் போராட்டங்கள் குறித்து அனுதாபப்படுவதன் மூலமும், அவர்களின் பிரச்சனைகளை செவியுறுவதன் மூலமும், அதை சமாளிக்கத் தேவையான ஊக்கமளிப்பதன் மூலமும் ஆதரவான சூழலை உருவாக்க முடியும். இது பிள்ளைகளின் மன அழுத்தத்தைத் தணிக்க உதவுவது மட்டும் இல்லாமல், அவர்களிடையே உணர்ச்சிப் பாதுகாப்பு உணர்வை வளர்க்கவும் உதவுகிறது.


ஊக்கமளிக்கும் ஆதரவு


பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, ஊக்கமளிக்கும் ஆதரவைப் பெற்றோர்கள் வழங்க வேண்டும். நேர்மறையான வலுவூட்டல் மற்றும் ஊக்கம் ஆகியவை குழந்தையின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் அதிகரிப்பதில் பெரிதும் உதவுகிறது. முயற்சி மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், பெற்றோர்கள் குறிக்கோள் சாதனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், பிள்ளைகள் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மன நிலையை வளர்க்க உதவ வேண்டும்.


மனம் திறந்த தொடர்பு


ஒரு குழந்தை அத்தியாவசியமான விஷயங்களுக்கு தனது பெற்றோரை அணுகுவதற்கு வசதியாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். விவாத கலந்துரையாடல்கள், கேள்விகள் அல்லது நட்பு அரட்டைக்குக் கூடத் தாம் தயாராக இருப்பதை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மனம் திறந்த தொடர்பு மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தையின் கவலைகளைப் புரிந்து கொண்டு சரியான வழிகாட்டுதலை திறம்பட வழங்க முடிகிறது.


முக்கியப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தல்


தேர்வுக் காலத்தில், சிறிய பிரச்சனைகளை விட பெரிய கவலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் ஆகும். பிள்ளைகளின் பிரச்சனைகளில் எப்பொழுது தலையிட வேண்டும், எப்பொழுது சிறிய விவரங்களை விட்டுவிட வேண்டும் என்பது குறித்து பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கவனச் சிதறல்களைக் குறைத்து, தேர்வுக்குத் தயார் செய்வதற்கான மிக முக்கியமான அம்சங்களை நோக்கி குழந்தையின் ஆற்றலும் கவனமும் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. 


மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது... திடீர் Logout - என்ன பிரச்னை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ