ராமேஸ்வரம்: குடும்பத்தினருடன் இறந்த உறவினர் ஒருவருக்கு திதி கொடுக்க வந்த பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலியான சோகம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முன்னோர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.


இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் சின்னப்ப ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அவருடைய இறந்துபோன உறவினருக்கு திதி கொடுப்பதற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார்.


மேலும் படிக்க | சமூக வலைத்தளங்களில் குழந்தைகளை மிரட்டிய நபர் கைது


திதி கொடுத்த பின்பு உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி குளித்த்தார். அப்போது, சுந்தரமூர்த்தியின் 16 வயது மகன் பிரசன்னா கடல் அலையில் சிக்கி உள்ளார்.


சிறுவனை அலை அடித்துச் செல்வதைக் கண்டு பதறிப்போன சுந்தரமூர்த்தியின் உறவினர்கள் உடனடியாக செயல்பட்டனர்.



கடல் அலையில் சிக்கிய 16 வயது பிரசன்னாவை மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கு, பிரசன்னாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.


இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திதி கொடுக்க வந்த இடத்தில் பதினோராம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் படிக்க | சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR