புதுடெல்லி: பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பெயரில் இருக்கை உருவாக்கப்படும் என்று: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி, பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பாரதியார் கல்வி பயின்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கையை (Faculty of Arts at Banaras Hindu University) நிறுவப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, டிவிட்டரில் பதிவு ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.



இனிமேல் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி தினமாக மாநில அரசு அனுசரிக்கும் என்று ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது மத்திய அரசின் சார்பில் காலத்தை வென்ற கவிஞருக்கு உலகப் புகழ் பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் (Banaras Hindu University) தனி இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மகாகவி, கல்வி பயின்ற அந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்குக் தனி சிறப்பு  கிடைக்கும். 


காலத்தை வென்ற கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர்,  சமூக சீர்திருத்தவாதி, இதழியலாளர் என பன்முகத்தன்மை கொண்ட சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  என்ற இயற்பெயரைக் கொண்ட பாரதியார் தமிழால் மக்களின் மனதில் விடுதலை தாகத்தை ஏற்படுத்தியார். என்று தணியுமோ இந்த தாகம் என்று ஏங்கியவர். அவர் பூதவூடல் நீத்து, நீங்காப்புகழ் பெற்ற 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாரதியில் நூறாவது நாள் நினைவு தினத்தில் தமிழில் பதிவு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். 


அதில், “உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.  



பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தனி இருக்கை நிறுவி, தமிழ் ஆய்வுகள் நடத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பாரதி பெயரின் அமையவிருக்கும் இந்த இருக்கை பயன்படும். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமரின் இந்த அறிவிப்பு, தமிழர்களுக்கும், மகாகவி பாரதிக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தை வகிக்கும் கலைப் பீடம் பழமையானது. 1898 ஆம் ஆண்டில் டாக்டர் அன்னி பெசன்ட் (Annie Besant) அவர்களால் நிறுவப்பட்டது பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் மற்றும் துறைகள் வளர்ந்தன. நவீன கல்வியிலும், தேசத்தை உருவாக்கும் முயற்சிகளிலும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் முக்கியப் பங்கையும் உணர்ந்த பண்டிட் மதன் மோகன் மாளவியா (Pt. Madan Mohan Malviya) இந்தியாவின் சிறந்த சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் மற்றும் பரப்புவதற்கான மையமாக கலைப்பீடத்தைக் கருதினார். 


அதன் பல்வேறு துறைகள் மூலம், இந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.  தற்போது பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மூன்று முக்கிய துறைகள் உள்ளன. அவை:
1. வரலாறு, கலாச்சாரம் மற்றும் தத்துவம்,
2. மொழி மற்றும் இலக்கியம்; மற்றும்
3. தொழில்முறை மற்றும் தொழிற்கல்வி படிப்புகள்.


Also Read | COVID-19 நிலைமை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR