விவசயிகளின் மனதை குளிர்விக்கும் வகையில் தமிழகத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் விளைவாய் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகத்திலும் நல்ல மழை பொழிவதால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் நீர்மட்டம் ஓரளவு சீராகி கொண்டிருக்கிறது.


கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.


எனவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்வர்த்து 7,249 கன அடியில் இருந்து 8,150 கன அடியாக உயர்ந்துள்ளது.


அணையின் நீர்மட்டம் தற்போது 41.04 அடியாகவும், நீர் இருப்பு 12.63 டி.எம்.சி.யாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியாக இருக்கிறது.