வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை: H.ராஜா
ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்; வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரவித்துள்ளார்!
ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்; வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரவித்துள்ளார்!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்றது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அரசியல் தலைவர்கள் தைகளின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 5 மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரவித்துள்ளார். அந்த ட்விட்டரில், "ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை" என அவர் குறிபிட்டுள்ளார்.