சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.   இந்த திடீர் அதிகரிப்பின் காரணத்தால் மக்கள் மற்றும் நிர்வாகத்திடம் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் (Coronavirus Pandemic) இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு,  ஊரடங்கு மற்றும் பல வித  தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.


கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா ஒரு நாள் தொற்றின் அளவு இறங்கு முகத்தில் உள்ளது.  கொரோனா ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், மக்களது நடமாட்டம் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 


தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் (Lockdown) பல வித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட சில மாவட்டங்களில் தொற்று கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு, சில மாவட்டங்களில் நேற்று இயல்பை வித அதிகமாக உயர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து மாவட்டங்களின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், 15 மாவட்டங்களில் மட்டும் புதன்கிழமை இருந்ததை விட வியாழனன்று அதிகருத்துள்ளது.


ALSO READ: Tamil Nadu Lockdown: மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொற்று எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காண முடிந்தது.


15 மாவட்டங்களில் தொற்று என்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று அளவில் படிப்பாடியாக நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. அதேபோல், தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் எண்ணிக்கை சரிந்துள்ளது நம்பிக்கையை அளிக்கின்றது. 


சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு திடீரென மீண்டும் அதிகரிக்கும் நிலையில், இதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 


இது குறித்து அவர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதில் அவர், ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம், அடுத்த சில நாட்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அதிகமாக கவனம் செலுத்தப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதாரச் செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மக்கள் அதிகமாக கூடும், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் கொரோனா பரவல் நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 


தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவை பெரும்பாலான மாவட்டங்களில் துவங்கி விட்டதால், இங்கெல்லாம் நோய் தொற்று பரவாமல் (Virus Spread) இருப்பதை உறுதி செய்வது முக முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தொற்று பரவுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளார்கள். 


ALSO READ: COVID-19 Update: தமிழகத்தில் 4,481 பேர் பாதிப்பு, 102 பேர் உயிர் இழப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR