புதுச்சேரி அரசுப் பேருந்துக் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 14-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், கடந்த வாரம் பேருந்து கட்டண உயர்விற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருந்தார். இதையடுத்து புதுச்சேரி அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் நகர்புறம் மற்றும் புறநகர் பேருந்திற்கான கட்டணங்களை உயர்த்தி இன்று சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 5 லிருந்து ரூபாய் 7 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 10 லிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:-


1. ரூபாய் 5 லிருந்து 7 ரூபாயாக  உயர்வு.
2. ரூபாய் 6 லிருந்து 9 ரூபாயாக  உயர்வு.
3. ரூபாய் 7 லிருந்து 10 ரூபாயாக உயர்வு.
4. ரூபாய் 8 லிருந்து 12 ரூபாயாக  உயர்வு.
5.  ரூபாய் 9 லிருந்து 13 ரூபாயாக  உயர்வு.
6. ரூபாய் 10 லிருந்து 14 ரூபாயாக  உயர்வு.