சென்னை போயஸ் கார்டனில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.  இந்த சோதனையானது வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகளுடன், 4 மணிநேரத்திற்கும் மேலாக நடைப்பெற்றது. நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 வருமான வரித்துறையின் சோதனை குறித்து கூறிய டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியலின் சதி, இருபதாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் இன்று காலை அளித்த பேட்டியில்  - 
“ போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரித்துறை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தியும். மேலும், போயஸ் இல்லத்தில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் மற்றும் சில கடிதங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதலும் செய்துள்ளனர். 


 இது எப்படியாவது எங்களை அரசியலில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட, சோதனையாகும்.  நான் எந்த அச்சுறுத்தலுக்கும், நடவடிக்கைக்கும் இனி  பயப்பட மாட்டேன்; சோதனை நடப்பதால் எங்களை  குற்றவாளிகள் என்று கூறிவிட முடியாது. உண்மையாக சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் தான் நடத்தியிருக்க வேண்டும். பதவியையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.