தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. இதற்கான அரசாணையை கடந்த மாதம் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விலை உயர்வுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை திரும்ப பெறக்கோரி தமிழக அரசிடம் கேட்டிகொண்டனர். ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததால், எதிர்க்கட்சி சார்பில் அனைத்து ரேசன் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு இன்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.