சத்தீஸ்கரில் நக்சல்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்கள் தமிழகம் வந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தார் பகுதியில் பர்கபால் - சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இது நக்சல் தீவிரவாதிகள் அதிக்கம் நிறைந்த பகுதியாகும். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்ஸலைட்கள் திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.


வீரமரணடைந்தவர்களில் சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை நல்லூரைச் சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகியோரும் அடங்குவர்.


இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 


தற்போது செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன் ஆகியோரது உடல்கள் திருச்சி வந்தடைந்தன. அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


அதேபோல் மற்றொரு வீரரான அழகுபாண்டியும் உடலும் மதுரை விமான நிலையத்துக்குகொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும்.