சூலூர் தொகுதி அதிமுக MLA கனகராஜ் திடீர் மரணம்!
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்!
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64). இவர் இன்று காலை தனது வீட்டில் செய்திதாள் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட அதிமுக-வில் மிக முக்கியமான தலைவரான கனகராஜ், மறைவு அதிமுக-வினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜூக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மேலும், இவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.
ஏற்கனவே தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், அதில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கனகராஜின் மரணத்தால் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.