ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து? - அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்தாகுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பரமணியன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடந்த சில வாரங்களாக ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 6 ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
ALSO READ | Tamil Nadu lockdown: தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு
இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பரமணியன் விளக்கமளித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னையின் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்ததப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பரமணியனிடம் ஊரடங்கு குறித்து கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் பெருநகரங்களில் உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. தொற்று எண்ணிக்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்பட்சத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் எனக் கூறினார். தொற்று எண்ணிக்கையை பொறுத்து வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பரமணியன் விளக்கம் அளித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR