கவர்ச்சி நாயகி சன்னி லியோன் படத்திற்கு எதிர்ப்பு!
வீரமாதேவி` படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
தற்போது இவர் தமிழ் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சரித்திர படத்தை செளகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் வீரமாதேவி என அறிவிக்கப்பட்டது.
இத்திரை படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் 'வீரமாதேவி' சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தற்போது இந்தியப் படங்களில் நடித்து வருகிறார்.
'வீரமாதேவி' படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.