சென்னையில் சாரல் மழை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கோடை சுட்டெரித்து வந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. மேலும், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், எண்ணூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழை காரணமாக குளிர்ந்த வானிலை நிலவுவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, இமய மலைத் தொடரில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால் வட மாநிலங்களில் விரைவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது.