தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று உலக வங்கி பாராட்டியுள்ளது என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா டுடேவின் இரண்டு நாள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியது. இந்த மாநாடு முதன் முறையாக சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். துவக்க விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் திறந்து வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். 


இந்தியா டுடே மாநாட்டில் ஆற்றிய உரையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-


இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் "தெற்கே சூரியன் உதிக்கிறது" என்று உரை ஆற்றினார். இந்தியா டுடே நிறுவனத்தின் மாநாடு டெல்லிக்கு வெளியே முதன் முறையாக நடக்கிறது. சென்னையில் இந்த மாநாடு முதன் முறையாக நடப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதாக உள்ளது. அம்மா வகுத்த பாதையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது .


நாட்டின் இரண்டாது பெரிய மாநிலம் தமிழ் நாடு. நாட்டிலேயே அதிக அளவில் அந்நிய முதலீடை பெறும் மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு சேவைதுறையில் அதிக பங்கு வகிக்கிறது. தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று உலக வங்கி பாராட்டியுள்ளது.


சமூக நலத்திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் தொலை நோக்கு திட்டம் - 2023 சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியாக செயல்ப்பட்டு வருகிறது. மாற்று எரிசக்தி துறையில் தமிழக முன்னிலை வகிக்கிறது. பயோ டெக்கனாலஜியில் முன்னேறி வருகிறோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது" என்று அவர் உரையாற்றினார்.