கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தன் பிடியில் சிக்கவைத்துள்ளது. ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்று அனைவரையும் பரவலாக பாதித்து வருகிறது இந்த வைரஸ். கொரோனா தொற்றும் அதனால் ஏற்பட்டு வரும் உலகளாவிய உயிர் இழப்புகளும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல், சினிமா, வர்த்தகம், விளையாட்டு என பல துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளரும் (Producer) நடிகருமான ராக்லைன் வெங்கடேஷ் (Rockline Venkatesh) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அவரது மகனும் மருத்துவருமான அபிலாஷ் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிகிறது.


இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சுமலதா அம்பரீஷை கடந்த வாரம் வெங்கடேஷ் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஆகையால், அவருக்கும் இந்தத் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் உள்ளது. எனினும், இது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.


ALSO READ: நடிகை மற்றும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷுக்கு Coronavirus Positive உறுதி


ராக்லைன் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் (Superstar) ரஜினிகாந்த் (Rajinikant) நடித்துள்ள லிங்கா (Lingaa) படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


நம்மைச் சுற்றி கொரோனா தொற்று வெகுவாக பரவியுள்ள நிலையில், அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். வரும் முன் காப்பது கொரோனாவுக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்.


ALSO READ: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா