கடந்த செப்டம்பர் 22-ம் தேதி 2016-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. மட்டும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால் தேர்தல் தடை செய்யப்படிருந்தது.


அதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் சென்னை ஆர்.கே.நகருக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்காக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. 


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக மருது கணேஷ் என மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.


இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் அறிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று ஆர்.கே.நகரில் திமுகவிற்கு விசிக ஆதரவு தருகிறது" என திருமாவளவன் தெரிவித்தார்.