இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரனை அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 


டெல்லியில் இருந்து விமான மூலமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 


அதிமுக அம்மா அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் முன் கூட்டியே வந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர். 


தினகரன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அப்போது தொண்டர்களும், நிர்வாகிகளும் மலர் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களை பார்த்து தினகரன் கையசைத்தார். கைகூப்பியும் வணங்கினார். அப்போது தினகரன் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டார்.


தொண்டர்கள் கூட்டத்தால் தினகரன் கார் வெளியே வருவதற்கு சிரமம் ஏற்பட்டது. போலீசாரும், நிர்வாகிகளும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.