தமிழில் தீர்ப்பு வழங்க தடை விதித்த உச்சநீதிமன்றம்
தமிழில் தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1994ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 வருடங்கள் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் என கோர்ட்டால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பிறகு விரிவாக விசாரிப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.