ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் 100-க்கு 110% பொருந்தும் என புதுசேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் என டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கானது கடந்த டிசம்பர் மாதம், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கினர். 


அதில், 'டெல்லியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவு ஆரோக்கியமாகவே உள்ளது. துணை நிலை ஆளுநர் மாநில அரசுடன் சேர்ந்து சுமுகமாகச் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள்மீது ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி மாநில முதலைமச்சர் நாராயணசாமி கூறியதாவது கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது....! 


யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பு தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.