தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, திமுக கொறடா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தனது தலைமையிலான அரசின் மீது சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 


இதில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த திமுக கொறடா இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு 4 வாரங்களக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.