திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணைக்கு இடைகால தடை விதித்த உச்ச நீதிமன்றம்
Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.
DMK Minister I Periyasamy: வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை இடைக்கால தடை விதித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு, முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த வேண்டும்" என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்தார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஐ.பெரியசாமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், இன்று அந்த வழக்கை விசாரித்தது. அப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மேலும் படிக்க - ’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா?
அமைச்சர் ஐ.பெரியசாமி மீது ஏன் வழக்கு தொடரப்பட்டது?
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அவர் 2008 ஆம் ஆண்டு முறைகேடாக வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஒதுக்கியதாக 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு குற்றம் சாட்டியது. அதனையடுத்து 2012 ஆம் ஆண்டு ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவித்த சிறப்பு நீதிமன்றம்
10 வருடம் கழித்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் மாநிலத்தில் திமுக ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது.
தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இவ்வழக்கை கையில் எடுத்தார். அதுமட்டுமில்லாமல் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவில் உத்தரவு பிறப்பித்தார்.
உச்ச நீதிமன்றம் இடைகால தடை
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க - கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் - பாஜக அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ