’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா?

Speaker Appavu: லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தனது மகனுக்கு சீட் கொடுக்காததால் சபாநாயகர் அப்பாவு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2024, 04:05 PM IST
  • திமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறேனா?
  • யாரோ இப்படி வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கிறார்கள்
  • சபாநாயகர் அப்பாவு காட்டமான பதிலை கொடுத்துள்ளார்
’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா? title=

சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடியில் தனியாருக்கு சொந்தமான ஆயத்த ஆடை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது, தனது மகனுக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் அதிருப்தியில் இருக்கிறீர்களா? கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என பதிலளித்தார்.

மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்

திமுக தலைமை மீது அதிருப்தியா?

தொடர்ந்து பேசிய அவர், " திருநெல்வேலி  நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் ஒதுக்கியதிலோ, தனது மகனுக்கு சீட் கொடுக்காத்திலோ தனக்கு எந்த வருத்தமும் இல்லை. திமுக தலைவர் தொகுதி பங்கீடு, தேர்தல் பணி, குறித்து பல்வேறு முடிவுகளை எடுக்கலாம். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவரணி செயலாளர் ஆகி உள்ள எனது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தால் அது எப்படி சரியாகும்.

மஞ்சள் பத்திரிக்கை செய்தி

தனது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுக்க கூடிய அளவில்  விபரம் இல்லாதவன் இல்லை நான். யார் கொடுத்த அழுத்தம் காரணமாக இது போன்ற செய்தி அவதூறாக பரப்பப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்தியா கூட்டணி அமைவதற்கு பிதாமகனே திமுக தலைவர் ஸ்டாலின் தான். பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். மஞ்சள் பத்திரிக்கை எழுதுவது போன்று தன்னை பற்றி தவறுதலாக  எழுதியுள்ளனர்" என்று ஆவேசமாக பேசினார். 

பின்னணி என்ன?

திருநெல்வேலி தொகுதியில் திமுகவுக்கு செல்வாக்கு இருந்தாலும், அங்கு உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அங்கு நேரடியாக போட்டியிட்டால் கட்சி பிரச்சனை இன்னும் அதிகமாகும் என்பதால் திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்கிவிட்டது. திமுகவில் அந்த தொகுதியை குறி வைத்து பலர் வேலை செய்து வந்தனர். ஆனால் கோஷ்டி பூசல் கட்டுங்கடங்காமல் பெரும் தலைவலியாக மாறியது. திமுக தலைமை சொல்வதையும் திருநெல்வேலி நிர்வாகிகள் கேட்காமல் இருப்பதால் இந்த முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துவிட்டார். இதில் சபாநாயகராக இருக்கும் அப்பாவுக்கு ஏக வருத்தம் என தகவல்கள் பரவியது. இந்த சூழலில் தான் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News