ஜெ., மகள் விவகாரம்: அம்ருதா மனு தள்ளுபடி!
மனுவை விசாரித்த நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது!
ஜெ., மகள் என்று உரிமை கோரிய, அம்ருதா-வின் மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் தான் தான் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் (வயது 38) டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு அளித்தார்.
ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்தார்.
மேலும், தான் ஆகஸ்ட்-14-1980-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மகளாக பிறந்ததாகவும். தன் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார் எனவும். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி இறந்துவிட்டார். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும் அம்ருதா தெரிவித்துள்ளார்.
அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. மனுவை விசாரித்த நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது!