தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்தவ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.