சிக்கலில் இருந்து சுர்ஜித் மீண்டு வர வேண்டும் -ராகுல் காந்தி!

சுர்ஜித் சிக்கலில் இருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்!
சுர்ஜித் சிக்கலில் இருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்!
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., "நாடே தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு சுர்ஜித்தை மீட்க போராடி வருகிறது. சுர்ஜித் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.