5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி -Viral News
ஜிஎஸ்டி, சிலிண்டர் விலை உயர்வு என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஐந்து ரூபாய்க்கு 80 வயது மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாள் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அவர்களது களைப்பை போக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய பானமாக திகழ்கிறது தேநீர். உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தப்படியாக மிக அதிகமாக அருந்தக்கூடிய பானம் தான் இந்த தேநீர். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேநீர் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் இனி பாக்கெட்டில் 10 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு டீ கடை பக்கம் கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் ஐந்து ரூபாய்க்கு 80 வயதை கடந்த ஒரு மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார் 80 வயதை கடந்த மூதாட்டி வீரலெட்சுமி. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை இழந்த அவர் அதே கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கு டீ கடை வைத்து தனது வாழ்கையை நடத்தி வருகிறார். தள்ளாத வயதிலும் முழு உடல் ஆரோக்கியத்துடன் 80 வயதான மூதாட்டி வீரலெட்சுமி, மற்ற முதியோர்களுக்கு முன்னுதாரணமாக தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நாள்தோறும் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்புடன் தனது டீ கடைக்கு வரும் நபர்களுக்கு 5 ரூபாக்கு பசும் பாலில் டீ கொடுக்க துவங்கும் மூதாட்டி மாலை 6 மணி வரை டீ வியாபாரியாக நாள்தோறும் 13 மணி நேரம் கடுமையான அவரது உழைப்பை தொடர்கிறார்.
மேலும் படிக்க: அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !
நகரத்தில் ஒரு கப் டீ 10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் ஐந்து ரூபாய்க்கு அசராமல் டீ விற்பனை செய்யும் இந்த மூதாட்டியின் சேவை மனப்பான்மை அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
மேலும் படிக்க: சிறுமிகளிடம் உடல் சுகத்தில் பங்கு கேட்ட பங்குத்தந்தை மீது பாய்ந்தது போக்சோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ