சிறுமிகளிடம் உடல் சுகத்தில் பங்கு கேட்ட பங்குத்தந்தை மீது பாய்ந்தது போக்சோ

தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பங்குத்தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2022, 02:07 PM IST
சிறுமிகளிடம் உடல் சுகத்தில் பங்கு கேட்ட பங்குத்தந்தை மீது பாய்ந்தது போக்சோ title=

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்ராபர்ட் (46), இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. இந்த திருப்பலியில் மண்டபம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மண்டபம் பகுதியில் இருந்து பிரார்த்தனைக்கு வந்திருந்த மூன்று சிறுமிகளை மட்டும் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் தனியாக அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு

அங்கு சிறுமிகளிடம் “நீ ரொம்ப அழகா இருக்க, உன்னைய பார்த்துக்கிட்டே இருக்கனும்போல இருக்கு” எனவும், மேலும் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆபாச வார்ச்சைகளால் பேசிக்கொண்டே சிறுமிகளின் உடலில் கை வைத்து தொட்டு தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பி வந்த மூன்று சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளனர். அதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர், உடனடியாக ராமநாதபுரம் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.  அதன்பேரில் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சிறுமிகள் மூன்றுபேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது ‘மேற்கொண்ட தகவலை’ தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பங்குத்தந்தை சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மண்டபம் காவல் நிலையத்தில் பங்குத்தந்தை மீது புகார் அளித்தார். அதன்பேரில் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பங்குத்தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு - மோசடியாளரான நகைக்கடை மேலாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News