MHC Chief Justice SV Gangapurwala: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த எட்டு மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படமால் இருந்து வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்தினம் உத்தரவு


இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர், நேற்று முன்தினம் (மே 26) எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும்... ஐடி ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பதில்!


33ஆவது தலைமை நீதிபதி


இதனையடுத்து தலைமை நீதிபதியாக இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி. கங்காபூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விடுதலை பெற்ற பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் 33ஆவது தலைமை நீதிபதி இவர் ஆவார்.



பங்கேற்றவர்கள்


இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைதியாநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும், சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


1985ஆம் ஆண்டு முதல்...


புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் அளித்து வாழ்த்து தொரிவித்தனர். கடந்த 1962ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 


கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இறந்தவரின் உடலை எடுத்து செல்ல மறுப்பு! கலவரமாக மாறிய கிராமம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ