சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், இளம்பெண், என்ஜினீயர் சுவாதி, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல்  பிரமுகர்கள் சுவாதி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் சூளைமேட்டில் உள்ள சுவாதியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு அவர்கள், சுவாதி பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதில் அரசு, காவல்துறைக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பங்கு உண்டு. அநீதிகளை கண்டு பொது மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது.சுவாதியின் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சமூக வளைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் சுவாதியை பற்றி யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என குஷ்பு கூறினார்.