சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு மாநகர போலீசாருக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து விசாரணை முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு சுவாதி கொலை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி கொலையாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.


5 நாட்களாகியும், சுவாதியை கொன்ற கொலையாளி யார்?  எந்தவிதமான துப்பும் துலங்காமலேயே உள்ளது.


சுவாதியின் செல்போன் எண்ணை வைத்து அவர் யாருடன் பேசி இருக் கிறார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். கொலையாளி எடுத்துச் சென்ற செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. 


இதை யடுத்து சுவாதியின் பேஸ்புக் கணக்கை போலீ சார் ஆய்வு செய்தனர்.அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து சாட் செய்து பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கேமராவில் பதிவாகி இருக்கும் வாலிபர் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்தான் சுவாதியை கொன்ற கொலையாளியாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் என்றும் கொலையாளியை நெருங்கிவிட்டோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.