ஊட்டி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. அதுமட்டுமல்லாது 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்த புலி கொடூரமாக கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.அந்த ஊர் மக்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் எனவும்,மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்குமாறும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்தது.ஆனால் மக்கள் புலியை சுட்டுக்கொன்று விடுங்கள் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து,அவ்வாறே பிடிக்க வனத்துறை முடிவு செய்தது.  புலியைக் கொல்லும் இந்த முடிவிற்கு டெல்லியை சார்ந்த விலங்கியல் நல ஆர்வலர் ஒருவர் புலியை கொலை செய்யக்கூடாது. இந்த செயல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளுக்கு புறம்பான ஒன்று என்று கூறி மனுதாக்கல் செய்ததையடுத்து இந்த முயற்சி கைவிடப்பட்டது.  மேலும் அந்த புலியை பிடிக்க எவ்வளவு முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை.பின்னர்,டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.



புலியை கண்காணிக்க வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.மேலும் மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில்,கண்காணிப்பு கேமரா மூலம் மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர் உடனே புலிக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.  மயக்க ஊசி செலுத்தியும் அந்த புலி வனத்துறையினரிடம் சிக்காமல் சிட்டு போல பறந்துவிட்டது.இருப்பினும் மயக்க மருந்தின் வீரியத்தால் புலி சோர்வடைந்து,எங்காவது மயங்கியிருக்க கூடும் என்பதால் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


ALSO READ T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR