தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடி நடவடிக்கை வேண்டும்- ஐகோர்ட்!
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது.
இதற்கிடையில் ஆக்சிஜன் (Oxygen) பற்றாக்குறை மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் (High Court) தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில்.,
ALSO READ | Apologize PM Modi என்ற கோஷத்தை முன்னெடுக்கும் ஓவைசி
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை, கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே உடனடியாக மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை செய்ய வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும். கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR